மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
02-Aug-2025
விழுப்புரம் : முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் முத்துமாரி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு, பக்தர்கள் கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து உற்சவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, இரவு வீதியுலா நடந்தது.
02-Aug-2025