உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா

 சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா

விழுப்புரம்: விழுப்புரம், வி.பாளையத்தில் உள்ள சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் 2வது ஆண்டு ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவர்கள் பங்கேற்ற தடகள போட்டிகள், நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம், பிரமிடு திறன் காட்சி, டிரில் போன்றவை மூலம் பெற்றோர்கள் முன்னிலையில் தங்களின் செயல்திறன்களை செய்து காட்டினர். விழாவிற்கு, பள்ளி நிறுவனர் டாக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரநாதன், மூத்த தாளாளர் ராஜசேகரன், தாளாளர் முத்துசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சுபஸ்ரீ வரவேற்றார். இந்த பள்ளியில், சோழ பேரரசு, மராத்தா பேரரசு, ெஹாய்சாலா பேரரசு, காக்கத்தியா பேரரசு ஆகிய நான்கு இல்ல அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளின் கீழ் நடந்த போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக விளையாடி பல புள்ளிகளை தட்டி சென்றனர். இந்த போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சுங்க மற்றும் ஜி.எஸ்.டி., துணை ஆணையர் நடராஜன் பதக்கம், சான்றிதழ், கோப்பைகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்தாண்டின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, அதிக புள்ளிகள் பெற்ற சோழ இல்லம் பிடித்து கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி