மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
21 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
21 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
21 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
21 hour(s) ago
செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கூலி உயர்வு தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கடந்த 13ம் தேதி மூட்டை மாற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல் கொள்முதல் தடைபட்டது. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மார்க்கெட் கமிட்டி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஏழுமலை தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார், செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, நெல் வியாபாரிகள் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் துரைகுமார், பொருளாளர் ஏழுமலை, தொழிலாளர் சங்க தலைவர் மாயக்கண்ணன், செயலாளர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், இருதரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து நேற்று வழக்கம்போல் நெல் கொள்முதல் நடந்தது. இன்று முதல் வழக்கம்போல் மார்க்கெட் கமிட்டி நடைபெறும் என்பதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வரலாம் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துஉள்ளார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago