உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மழைநீர் சேகரிப்பு குளத்தில் கழிவுநீர்

 மழைநீர் சேகரிப்பு குளத்தில் கழிவுநீர்

வி ழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் அருகில் மழைநீர் சேகரிப்பு குளம் உள்ளது. குளத்தை தொடர்ந்து பராமரிக்காததால், கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் - புதுச்சேரி சாலையின் இடபுறம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த பகுதியில், சாலையோர பிரதான வாய்க்காலை உடைந்து, கலெக்டர் அலுவலக வளாக குளத்திற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு குளத்தில் மழை அதிகரிக்கும்போது, தண்ணீர் வெளியேறி சாலையோர கால்வாயில் செல்வதற்காக கிளை கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது, அதற்கு மாறாக, நெடுஞ்சாலையோர கால்வாயில் இருந்து கழிவுநீர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளத்திற்கு வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, குளத்தில் மழைநீர் மட்டுமே தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்