உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலியல் தொழில்; ஒருவர் கைது

பாலியல் தொழில்; ஒருவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தில் ஒரு வீட்டில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் மாலை சாலாமேடு பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, அப்பகுதியில் ஒரு வீட்டில், செஞ்சி, பனமலைபேட்டையைச் சேர்ந்த முத்துராமன் மகன் கிருபா, 35; என்பவர், பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கிருபா மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை