விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். சிறுவள்ளிக்குப்பம், ராதாபுரம், மதுரபாக்கம் ஊராட்சிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பூத் வாரியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, படிவம் நிரப்புவது, பாக முகவர்கள், பூத் குழு உறுப்பினர்கள் தங்களது நோட்டுகள் பூர்த்தி செய்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி துரை, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், கஸ்துாரி பாண்டியன், மகேஸ்வரி பாஸ்கர், ஊராட்சி தலைவர்கள் கஜேந்திரன், ராமச்சந்திரன், பானுப்பிரியா ரவிச்சந்திரன், சீனுவாசன். தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், கிளைச் செயலாளர் அருண், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சபரிமுத்து, தன சேகர், துரைராஜ், சண்முகம், புஷ்பராஜ், கருணாநிதி, ரவிக்குமார், சுரேஷ், பாபு , தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.