புத்தக கண்காட்சி விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழாவையொட்டி நடந்த புத்தக கண்காட்சிக்கு மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன், கண்காட்சியை துவக்கி வைத்தார். வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன் வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் கணேச கந்தன், சங்க செயலாளர் சுரேஷ் குமரன், எழுத்தாளர் செங்குட்டுவன் வாழ்த்தி பேசினர். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன் நன்றி கூறினார். குழந்தைகள் தின விழா பாஞ்சாலம் ஊராட்சியில் உள்ள உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள், எழுது பொருட்கள், இனிப்பு வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், கிளைச் செயலாளர் கார்த்திக், ராஜேஷ், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய சமூக வலைதள தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குணவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கஞ்சனுார், ஒரத்துார் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் திருத்தப் பணி குறித்து கேட்டறிந்தார். மேலும் பி.எல்.ஓ., செயலியில் படிவம் உள்ளீடு செய்யும் பணியினை பார்வையிட்டு அவர்களிடம் படிவம் நிரப்புவது குறித்து பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க அறிவுறுத்தினார். தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சந்திரசேகரன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் செல்வமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ., சீனிவாசன் உடனிருந்தனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓசூரில் இருந்து மகளிர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், 30 பேர் கார் மூலம் போதை ஒழிப்பு மற்றும் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலமாக விழுப்புரத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரில், விழுப்புரம் ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் சுரேஷ்குமரன், பொருளாளர் புவனேஸ்வரி, துணை ஆளுநர் நம்மாழ்வார் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஆளுநர் தேர்வு கன்யா ரமேஷ், மணி, முன்னாள் துணை ஆளுநர்கள், முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் ரயில்வே லோகோ பைலட் தொழிலாளர் (டிரைவர்கள்) சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி கோட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார். மத்திய அமைப்பு செயலாளர் பாலச்சந்தர் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். ஈஸ்வரதாஸ் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில், வரும் டிசம்பர் 2ம் தேதி, மத்திய கமிட்டி அறிவித்துள்ள 48 மணி நேர கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் குறித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு விழுப்புரம் அரசு கல்லுாரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் வரவேற்றார். திட்ட அலுவலர்கள் சுசான்மரி நெப்போலியன், சத்யா நோக்க உரையாற்றினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். திட்ட அலுவலர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கலந்துரையாடல் விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு நடந்த போட்டித் தேர்வு மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, நுாலக அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மைய நுாலகர் இளஞ்செழியன் வரவேற்றார். உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். நுாலகர் ஆரோக்கியம் நன்றி கூறினார்.