மேலும் செய்திகள்
இரு மகன்களுடன் தாய் மாயம்
23-Oct-2024
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பி.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 48; இவரது மனைவி சுகுணா, 45; இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 மாதங்களுக்கு முன் தனது இரு மகன்களோடு தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், சுகுணா அடகு வைத்திருந்த அவரது 2 சவரன் நகையை சிவசங்கர் மீட்டுள்ளார். இதையறிந்த சுகுணா மற்றும் அவரது மகன்கள் இருவரும், கடந்த 17ம் தேதி வீட்டிற்கு சென்று சிவசங்கரிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.அப்போது ஆத்திரமடைந்த அவரது மகன்கள் தந்தை சிவசங்கர் மற்றும் பாட்டி கற்பகம், 70; ஆகியோரை தாக்கினர்.புகாரின் பேரில், சிவசங்கர் மனைவி சுகுணா மற்றும் 2 மகன்கள் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஹரிஷ், 18; என்பவரை கைது செய்தனர்.
23-Oct-2024