உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாநில அளவிலான கபடி போட்டி: அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

 மாநில அளவிலான கபடி போட்டி: அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

விக்கிரவாண்டி: எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி விளையாட்டில் மூன்றாம் இடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வா கியுள்ளனர். விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி முகையூர் புனித சேவியர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது .இப்போட்டியில் எடப் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகள் 17 வயது முதல் 19 வயது பிரிவில் கபடி விளையாட்டில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்த அணியினர் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ஹரிதாஸ் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி