| ADDED : ஜன 07, 2024 05:26 AM
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான கருத்தரங்கு துவங்கியது.கல்லுாரி துணை முதல்வர் செல்வி வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் அகிலா விளக்கவுரையாற்றினார். ஆராய்ச்சிப்புல முதன்மையர் கலைமதி சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் அறிவியலில் ஆர்வமுள்ள 9ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குடியிருப்பு பயிற்சித் திட்டத்தின் மூலம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், விழுப்புரம், கடலுார் மாவட்ட கிராமப்புற பள்ளிகளில் பயிலும், அறிவியல் பாடத்தில் ஆர்வத்துடன், அதிக மதிப்பெண் பெற்ற 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கல்லுாரி உதவி பேராசிரியர் கலைவாணி நன்றி கூறினார். கருத்தரங்கு வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.