தெய்வானை கல்லுாரியில் மாணவியர் பேரவை
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவியர் பேரவை துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். மாணவியர் பேரவை தலைவர் ஜமீன் மிஹ்ராஜி வரவேற்றார். மாநில சிறப்பு பயிற்றுநர் பேராசிரியர் மணிகண்டன், மாணவியர் பேரவை மற்றும் கூடுதல் சேவை அமைப்பை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக, கலை மற்றும் அறிவியல் துறை சார் செயலாளர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தனர். மாணவியர் பேரவை துணைத் தலைவர் காயத்ரி நன்றி கூறினார்.