உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சப்கலெக்டர் ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சப்கலெக்டர் ஆலோசனை

திண்டிவனம் : திண்டிவனத்தில் சப் கலெக்டர் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனம், மயிலம் தொகுதிகளில், 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஜக்காம்பேட்டை சப் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உதவி கலால் ஆணையர் ராஜீ (சப் கலெக்டர் பொறுப்பு) தலைமை தாங்கினார். தாசில்தார் யுவராஜ், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திண்டிவனம் தொகுதியில் 27 ஓட்டுச்சாவடிகள், மயிலம் தொகுதியில், 8 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக பிரித்தது குறித்து கருத்து கேட்கப்பட்டது.இதில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,அவைத்தலைவர் சேகர், அ.தி.மு.க.,முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் கோரிக்கைகள் குறித்து பேசினர்.கூட்டத்தில் திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் உதயகுமார், தே.மு.தி.க.., நகர செயலாளர் காதர்பாஷா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை