அரசு பஸ்சில் திடீர் தீ: திண்டிவனம் அருகே பரபரப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பயணிகளுடன் சென்ற அரசு பஸ் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் இரு ந்து சென்னை அடையாருக்கு நேற்றிரவு 7:45 மணிக்கு, அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த னர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி சந்திப்பு அருகே இரவு 9;30 மணிக்கு சென்றபோது, டிரைவரின் பக்கத்தில் இருந்த கியர் பாக்சில் இருந்து புகை வந்தது. சற்று நேரத்தில் கியர் பாக்ஸ் தீப்பித்தது. இதனால் டிரைவர் அவசர அவசரமாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளை இறங்கும்படி கூறினார். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தினர் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது. ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பயணிகளை மாற்று பஸ்சில், ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.