உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை

செஞ்சியில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை

செஞ்சி : செஞ்சியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. செஞ்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று மாலை 4:00 மணிக்கு, திடீரென சூறாவளி காற்றுடன் மழை பொழிந்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சூறாவளி காற்றின் காரணமாக ஏராளமான மரகிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ