உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: அரசு பள்ளி மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். விழுப்புரம், முகையூரைச் சேர்ந்த பால் வின்சென்ட், 43; விழுப்புரத்தில் உள்ள மாணவியர் படிக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் விழுப்புரம் போலீசார், போக்சோவில் பால் வின்சென்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை