உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாலிபரின் கார் திருட்டு

 வாலிபரின் கார் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் உறவினர் திருமணத்திற்காக வந்த வேலுார் மாவட்ட வாலிபரின் காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். வேலுார் மாவட்டம், சின்னஆலபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் மகன் ஷேக் இமாம்,27; இவர், தனது மைத்துனர் திருமணத்திற்காக, விழுப்புரத்திற்கு மாருதி ஓம்னி காரில் வந்தார் . இந்த காரை ஷேக் இமாம் கடந்த 10ம் தேதி, விழுப்புரம் நவாத்தோப்பு சந்து பகுதியில் நிறுத்தியுள்ளார். பின், மறுநாள் வந்து பார்த்த போது காரை காணவில்லை. திருட்டு போன காரின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து காரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்