உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு விழாவில் 765 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கிய அமைச்சர்

அரசு விழாவில் 765 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கிய அமைச்சர்

செஞ்சி : செஞ்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 765 பயனாளிகளுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.செஞ்சி தாலுகாவை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று செஞ்சியில் நடந்தது.மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஏழுமலை வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் வருவாய் துறை சார்பில் 765 பயனாளிகளுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு 2.67 லட்சம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகம், ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் பேரூராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி