உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு

சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு

திண்டிவனம்:சென்னை, மாதவரம், திருமலை நகரை சேர்ந்தவர் ரமேஷ், 21; தனியார் கல்லுாரி மாணவர். இவரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா, 20, என்பவரும் காதலித்தனர்.இருவரும் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு டூ - வீலரில் கிரிவலம் புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் டோல்கேட் அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்த இருவர், ரமேஷிடம் மொபைல் போனை பறித்து, பவித்ராவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.ரமேஷ் அதை கண்டிக்கவே தகராறு ஏற்பட்டது. பயத்தில் பவித்ரா ஓடியபோது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக சென்ற கார் அப்பெண் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரமேஷ் கூறியுள்ளார். போலீசார் பவித்ரா உடலை மீட்டு, சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை