உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி

வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி

மயிலம்: புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில் வல்லம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது.வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில்'தினமலர்-பட்டம்'இதழ் ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில் பட்டம் இதழின் பதில் சொல் அமெரிக்கா செல் . போட்டிக்கு மயிலம் சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பா.ம.க., ஒன்றிய தலைவர் பாண்டியன் ஒன்றிய செயலாளர் பிரபு, ஒன்றிய துணை செயலாளர் அறிவழகன், வன்னியர் சங்க நிர்வாகிகள் தென்னரசு, ராமகிருஷ்ணன், வேலுச்சாமி, குணசேகர், சுரேஷ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் வரவேற்றார்.முன்னதாக இப்போட்டியில் 120 மாணவ, மாணவிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தி, அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. 8ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவர்கள் ஆகாஷ், பிரசாத் இரண்டாம் இடம் பிடித்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் வழங்கிப் பேசினார். இதில் சமூக ஆர்வலர் ரவி, ஆசிரியர்கள் பத்மாவதி, சாஹிதா, ஜெயராமன், மாலதி, தேவிகா, செந்தில்குமார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை