மேலும் செய்திகள்
மீண்டும் மஞ்சள் பை விருது அறிவிப்பு
18 minutes ago
17ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
19 minutes ago
காசநோய் விழிப்புணர்வு முகாம்
21 minutes ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்ட கனிம வளத்துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கனுார் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மூன்று யூனிட் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். உதவி இயக்குனர் முத்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
18 minutes ago
19 minutes ago
21 minutes ago