மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
19-May-2025
திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பட்டதாரி பெண் மற்றும் 2 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி; இவரது மகள்கள் சிவசங்கரி, 20; பட்டதாரி. அபிநயா, 15; பத்தாம் வகுப்பு மாணவி. இவரது உறவினர் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராம ராஜேந்திரன் மகன்கள் ராஜேஷ், 13; கிரண், 8; இருவரும் கோடை விடுமுறைக்காக அரசூர் சென்றிருந்தனர்.நேற்று காலை 7:30 மணிக்கு, சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ், கிரண் ஆகிய நான்கு பேரும், அரசூர் மலட்டாறு அருகிலுள்ள தங்கள் சொந்த நிலத்தில் வேலை செய்துவிட்டு அருகில் உள்ள மலட்டாறில் குளிக்க சென்றனர். காலை 11:00 மணிக்கு, சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூவரும் மட்டும் ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறுவன் கிரண் கரையில் அமர்ந்திருந்தார்.ஆற்றில் இறங்கிய மூவரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். கரையில் அமர்ந்திருந்த கிரண் சம்பவம் குறித்து பெரியம்மா சித்ராவிடம் சென்று தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சித்ரா திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீர்கள், ஆற்றில் மூழ்கி மாயமான மூவரை தேடும் பணியில் இறங்கினர். சில நிமிடத்தில் இறந்த நிலையில் சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றார். ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
19-May-2025