உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமூகப்பணி இரண்டாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு பவ்டா தலைமையகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதன்மை நிதி அலுவலர் பாலாஜி ரங்கராஜன் தலைமை தாங்கினார். பொது மேலாளர்கள் பன்னீர்செல்வம், சாந்தாராம், தேவசேனாதிபதி மற்றும் துணை பொது மேலாளர்கள் சரோஜினி, கவுசிக் இக்பால், குடும்பநல ஆலோசகர் பாத்திமாபி, கல்லுாரி உதவி பேராசிரியர் யுவராணி பயிற்சி அளித்தனர். இதில், சமூகப்பணியை எப்படி அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வது மற்றும் பவ்டா தொண்டு நிறுவனம் இச்சமூகப்பணியை எப்படி செய்து வருகிறது என்பது குறித்து, பயற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி