உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அண்ணா தொழிற்சங்க விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக பணியாளர் சங்கம் தங்க பாண்டியன் வரவேற்றார்.அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், அய்யாக்கண்ணு, பாட்டாளி தொழிற் சங்க மண்டல தலைவர் ஞானதாஸ், மண்டல செயலாளர் தங்க குப்புசாமி, பொருளாளர் சிவாஜி, தே.மு.தி.க. தொழிற்சங்க மண்டல தலைவர் சேகர், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் ஞானமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பண பலன்களை உடனே வழங்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அண்ணா தொழிற்சங்கம் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி