உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து அமைச்சர் ஆய்வு தொழிற்சங்கத்தினர் கோஷம்

போக்குவரத்து அமைச்சர் ஆய்வு தொழிற்சங்கத்தினர் கோஷம்

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வின்போது, அண்ணா தொழிற் சங்கத்தினர் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மாலை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு திரண்ட அண்ணாதொழிற் சங்கம், சி.ஐ.டி.யூ., சங்கத் தினர் அவரை சந்தித்து பேச முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது, போக்குவரத்து தொழிற் சங்கத்தினரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பதாகை ஏந்தி கோஷமிட்டனர். உடனே ஆய்வை முடித்துக்கொண்டு, அமைச்சர் தனது காரில் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ