உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

விழுப்புரம்; திண்டிவனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், அவரப்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி தலைமையிலான, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று அவரப்பாக்கத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சங்கர்,34; என்பவர் வீட்டில், 400 கிலோ ரேஷன் அரிசி, மறறும் 600 கிலோ ரேஷன் அரிசியில் உடைத்த நொய் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட சங்கரை விசாரணை செய்ததில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, கோழி, மாடுகளுக்கு தீவனமாக அரைத்து கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கியது தெரிய வந்தது. விழுப்புரம் அடுத்த பனையபுரத்தில்வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பதுக்கி ஓட்டல்களுக்கு விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து நடத்திய சோதனையில் பக்கிரிசாமி,62; என்பவர் வீட்டில் சோதனை செய்ததில், 23 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பதுக்கியிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம், வீட்டு உபயோக சிலிண்டரை வாங்கி, பதுக்கி வைத்து ஓட்டல்களுக்க கூடுதல் விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து சங்கர் மற்றும் பக்கிரிசாமி ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை