மேலும் செய்திகள்
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
17-Jan-2025
விழுப்புரம் : இரு சக்கர வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.வானுார் போலீசார் நேற்று அதே பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியே இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அட்டை பெட்டிகளில் 180 மில்லி கொண்ட மொத்தம் 96 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வேம்பாக்கத்தை சேர்ந்த பூபாலன்,29; தேனாம்பேட்டையை சேர்ந்த ரமேஷ்,33; என தெரியவந்தது. இவரும் புதுச்சேரியில் மதுபாட்டில்கள் வாங்கி தங்கள் ஊருக்கு விற்க கொண்டு சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
17-Jan-2025