உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒலக்கூர் ஒன்றிய பகுதியில் சமூக சமத்துவ படை பிரசாரம்

ஒலக்கூர் ஒன்றிய பகுதியில் சமூக சமத்துவ படை பிரசாரம்

திண்டிவனம் : சமூக சமத்துவபடை நிறுவன தலைவர் சிவகாமி ஒலக்கூர் ஒன்றியத்தில் நேற்று கட்சி கிளையை திறந்து வைத்தார். பின்னர் கொடியேற்றி வைத்து பிரசார பயணம் செய்தார். இவர் ஒலக்கூர் ஒன்றியம் நல்லாத்தூர், ஏவலூர், மேல்பாக்கம், தாதாபுரம், பாஞ்சாலம், நெய்குப்பி, பாதிரி, ஒலக்கூர், சாத்தனூர், மேல்வாவிலங்கை, கீழ்மாவிலங்கை, கூச்சி கொளத்தூர், நங்குணம், கீழ்காரணை ஆகிய கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.இவருடன் மாநில பொதுச்செயலாளர் கே.வி.ஜி., மாவட்ட தலைவர் ராதிகா, செயலாளர் கிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், செயலாளர் மதியழகன், அமைப்பாளர் அரிகிருஷ்ணன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி