விழுப்புரம் பஸ் நிலையம் வெறிச்சோடியது
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் பயணிகள் கூட்டமின்றி, பஸ் நிலையம் வெறிச்சோடியது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகியவற்றில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பஸ் போக்குவரத்து குறைந்த அளவில் இருந்தது. பஸ் நிலைய வளாகத்தில் வெளியூர் செல்வதற்காக குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். வழக்கத்தைவிட, மிக குறைந்த அளவிலான பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.பயணிகள் கூட்டமில்லாததால், பஸ் நிலைய வளாகம் வெறிச்சோடியது. விழுப்புரம் ரயில் நிலையத்திலும், பயணிகள் சொற்ப அளவில் மட்டுமே காத்திருந்தனர்.