உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி அரசு பள்ளியில் அரிமா சங்க பரிசளிப்பு விழா

விக்கிரவாண்டி அரசு பள்ளியில் அரிமா சங்க பரிசளிப்பு விழா

விழுப்புரம் : விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.அரிமா சங்கம் மற்றும் ஜி.எம்.ஆர் வரலட்சுமி பவுண்டேஷன் இணைந்து பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பெற்ற மாண வர்களுக்கு பரிசு வழங் கினர். விழாவிற்கு அரிமா சங்க தலைவர் ராசி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வேணு வரவேற்றார். பள்ளியில் முதலிடத்தை பெற்ற மாணவன் முஜிபுர் ரஹ்மான், தமிழரசனுக்கு தலா தலா 2,000 ரூபாய் நிதியை மாவட்டதலைவர் விஜயராகவலு வழங்கினார்.பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஜி.எம்.ஆர்.,டோல் பிளாசா பாதுகாப்பு அதிகாரி அசோக் தலா 1000 ரூபாய் வழங்கினார்.

அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவில் பத்தாம் வகுப்பில் முதலிடத்தை பெற்ற மாணவிகள் சிவரஞ்சனி, வினோதினி, மெகதாஜ் ஆகியோருக்கு ஜி.எம். ஆர்., பாதுகாப்பு அதிகாரி அசோக் தலா 1000 ரூபாய் நிதி மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு அரிமா சங்கம் சார்பில் தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது. அரிமா மாவட்ட தலைவர்கள் ராஜாராமன், சீனுவாசன், கீதாஞ்சலி சீனுவாசன், மணிவண்ணன், நிர்வாகிகள் குமாரகிருஷ்ணன், அஷரப்உசேன், ரவி, முருகன், அஸ்கர்அலி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை