உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திண்டிவனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திண்டிவனம் : திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு குற்றவியல் வக்கீல் கணேஷ்காந்தி முன்னிலை வகித்தார். இதில் டி.எஸ்.பி., குப்புசாமி கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கம், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். அவசரம், பதட்டமில்லாமல் செயல்படவேண்டும். பணம், நகைகளை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். ஒவ்வொரு செயலையும் அதற்குண்டான விதிமுறைகளின்படி செய்யும் போது பாதிப்புகளை தவிர்த்து விட முடியுமென பேசினார்.சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு பற்றி டாக்டர் வித்யா தம்பிராஜா பேசினார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், நெடுங்கிள்ளி வளவன், நெடுஞ்செழியன், அன்னை கருணாலயா சமூக நல அலுவலர் வேலு கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி