உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது

இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிந்து மூன்று பேரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி மணிகொடி, 40. ராஜி அதே பகுதியை சேர்ந்த தேவகுமார் மனைவி செல்வி, 30 என்பவர் வீட்டில் இருந்ததை மணிகொடி தட்டிக்கேட்டார். இதனால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிந்து செல்வி, திவேல், 38, மகேந்திரன், 29 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி