உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில பாட்மின்டன் போட்டி விழுப்புரம் மாணவர் சாம்பியன்

மாநில பாட்மின்டன் போட்டி விழுப்புரம் மாணவர் சாம்பியன்

விழுப்புரம்: மாநில சப் ஜூனியர் பாட்மின்டன் போட்டியில் வென்று விழுப்புரம் மாவட்ட மாணவர் சாதனை படைத்தார். விருதுநகர் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பி ல் சிவகாசியில், மாநில சப் ஜூனியர் பாட்மின்டன் சேம்பியன்ஷிப் போட்டி கடந்த,16 ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில்,15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 800 பேர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் விழுப்புரத்தை சேர்ந்த சதா பாட்மின்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர் கோவிந்தகிருஷ் ணன், 15 வயதுக்குட்பட்டோர் இரட்டை பிரிவில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இந்த போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இதே போல் இவர், சமீபத்தில் மதுரையில் மாநி ல அளவிலான 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதித்துள்ளார். சாம்பியன் பட்டத்தை வென்ற கோவிந்தகிருஷ்ணன், தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவர் கவுதமசிகாமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை