உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்

பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் அவதார தின உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூர விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை ஆண்டாள் அவதார தின உற்சவம் நடந்தது. மாலை 5 மணிக்கு பெருமாள், ஆண்டாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் சமேத பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து ஆராதனை, சாற்று முறை சேவை மற்றும் மந்திர உபசார பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை