உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்

தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்

தியாகதுருகம்:அழகான தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான வகையில் பெயர் பலகைகள் வைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை- சேலம் இடையே 1,000 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. உளுந்துர்பேட்டையில் இருந்து ஆத்தூர் வரையில் பணிகள் முடிந்துள்ளதால் பெயர் பலகைகள் வைத்து வருகின்றனர். நான்குவழிச்சாலைகள் செல்லும் வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள் பச்சை நிற போர்டில் வெள்ளை நிறத்தில் பெரிதாக எழுதி வைத்துள்ளனர்.இதில் பல ஊர்களில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த உலகம்காத்தான் என்ற ஊரின் பெயரை 'உலகம் காட்டான்' என்று எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பெயரை அப்படியே தமிழில் காப்பியடித்து எழுதியதால் ஊர்களின் பெயர்கள் அர்த்தம் மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது.அழகான தமிழ் பெயரை அப்படியே எழுதி வைத்து அதனை ஆங்கிலத்தில் எழுதாமல், ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழில் எழுதும்போது உலகம் காத்தான் என்பது 'உலகம் காட்டானாக' மாறியுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பெயரும் தவறாக உள்ளதுதான்.அதேபோல் ஏமப்பேர் என்ற ஊரின் பெயரை ஏமப்பர் என்றும் தவறாக எழுதி பெயர்பலகை வைத்துள்ளனர். ஏதோ கடமைக்கு பெயர் பலகை வைக்காமல், ஊரின் பாரம்பரியத்தையும், வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளங்களாக உள்ள தமிழ் பெயர்களை மாற்றி கொச்சைப்படுத்தாமல் சரியான பெயரை பலகையில் எழுதி வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை