உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு

மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு

அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை அருகே இரு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அவலூர்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி காலனியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலை ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப் போது கோவில் உண்டியல்கள் மற்றும் இரும்பு பெட்டிகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காலனியில் இருந்த மாரியம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இரும்பு பெட்டி அருகே இருந்த பிளாஸ்டிக் பைகளில் கவரிங் நகைகளுடன், நான்கு சவரன் தங்க நகைகளும் இருந்தன. இவற்றை கவரிங் நகைகள் என கருதி மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.இதே ஊரில் உள்ள காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்தும் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மோகனமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை