| ADDED : செப் 25, 2011 01:39 AM
மயிலம்:மயிலம் தமிழ் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் ரத்த
தான முகாம் நடந்தது.மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை,
அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதீனம்
ஸ்ரீசிவஞான பாலய சுவாமி தலைமை தாங்கினார். விழுப்புரம் அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி டாக்டர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் லட்சாராமன் வரவேற்றார்.மயிலம் வட்டார அலுவலர்
சிவராஜ் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரியின் முன்னாள் முதல் வர்
திருநாவுக்கரசு, வட்டார விரிவாக்க கல்வியாளர் மனோகரன், சுகாதார
மேற்பார்வையாளர் வாசு, சமுதாய நல செவிலியர் ஆனிசரோஜினி சந்திரமதி
வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் என்.எஸ்.எஸ்., அலுவலர் திருநாவுக்கரசு
நன்றி கூறினார்.