விழுப்புரம் : பள்ளி மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்', பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் ஆடுகளை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம் பெத்தரெட்டிக்குப்பம், கெங்கரகொண்டான் கிராமத்தில் 52 குடும்பத்திற்கு மிக்சி, கிரைண்டர், பேன், சிறுவந்தாடு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 61 பேர், பில்லூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு இலவச 'லேப்டாப்' மற்றும் பிரம்மதேசம் கிராமத்தில் 30 ஏழை குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். எம்.பி., ஆனந்தன், எம்.எல்.ஏ.,க்கள் அரிதாஸ், ஜானகிராமன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் இலவச நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், மாவட்ட திட்ட அலுவலர் முத்து மீனாள், ஆர்.டி.ஓ., பிரியா, சிறப்பு திட்டங்கள் துணை ஆட்சியர் நீலவேணி, சி.இ.ஓ., குப்புசாமி, தாசில்தார் ஜவகர் பங்கேற்றனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, கண்ணன், நகர செயலாளர் வக்கீல் பாஸ்கரன், தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், தலைவர் நெடுஞ்செழியன், பொருளாளர் ரகுநாதன், மாவட்ட மாணவரணி செங்குட்டுவன், வழக்கறிஞர் சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.