உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் திருத்த பணி தெற்கு மாவட்ட தி.மு.க., ஆய்வு

 வாக்காளர் பட்டியல் திருத்த பணி தெற்கு மாவட்ட தி.மு.க., ஆய்வு

விழுப்புரம்: திருக்கோவிலுாரில் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணிகளை தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆய்வு செய்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் நகர பகுதிகளில் உள்ள 169 முதல் 185 வரை உள்ள ஓட்டுச்சாவடிகளில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆய்வு செய்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர்மன்ற துணை தலைவர் குணா, நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் உட்பட வார்டு செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், பாகநிலை முகவர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்