உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எதப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டப்படுமா?

எதப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டப்படுமா?

அவலுார்பேட்டை: எதப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சேதமாகி மழை நீர் ஒழுகுவதால் புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனுார் அடுத்த எதப்பட்டு கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமான நிலையில் மழை நீர் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுனால் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. கன மழை பெய்தால் கட்டடம் முழுவதும் ஓதம் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் எதப்பட்டு, கரடிக்குப்பம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடத்தை புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி