உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நீரில் மூழ்கி தொழிலாளி பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே வலிப்பு நோயாளி நீரில் மூழ்கி இறந்தார்.வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், 33; கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவது வழக்கம். இந்நிலையில் ரமேஷ், கடந்த 17ம் தேதி அதே கிராமத்தில் உள்ள பாகூரான் வாய்க்காலில் கால் கழுவ சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீரில் மூழ்கி இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ