உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் - மொபட் மோதல் தொழிலாளி பலி

பைக் - மொபட் மோதல் தொழிலாளி பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பைக், மொபட் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.திண்டிவனம் வட்டம் வீடூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்,47: விவசாய தொழிலாளி, இவர் தற்பொழுது தனது மாமனார் ஊரான ஆசாரங்குப்பத்தில் தனது மனைவிசெல்வி,மகன்கள் விஜய்குமார், அருண்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.கடந்த 20 ம் தேதி இரவு குப்பன் ,தனது பைக்கில் வீடூர் வந்து மீண்டும் ஆசாரங்குப்பத்திற்கு திரும்பினார். பைக் சித்தணி நினைவு துாண் அருகே வந்த போது எதிரே சித்தணியிலிருந்து வந்த செல்வம் என்பவரது மொபட்டும் நேருக்கு நேர் மோதியது .விபத்தில் பலத்த காயமடைந்த குப்பன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.விக்கிரவாண்டி போலீசில் குப்பன் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை