உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

வானுார்: வானுார் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வானுார் அடுத்த பெரம்பை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் சாரதி, 20; இவர், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சிறுமி நெருங்கிப் பழகினார். இதில், சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், சாரதி மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை