உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

 கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கெடார் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 32; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ராஜா என்பவரின் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். வெகுநேரமாகியும் சிலம்பரசன் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் கிணறு உள்ளிட்ட பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த கெடார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடி, சிலம்பரசன் சடலத்தை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை