உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்

ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து ஜூன் 30 முதல் ஜூலை 6 வரையில் 39 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, 14 கடைகளுக்கு சீல், ஒரு வாகனம் பறிமுதல் செய்து ரூ. 3.75 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.மாவட்டத்தில் 2024 ஜன. 1 முதல் ஜூன் 29 வரை உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து 448 முறை தடை புகையிலை விற்பனை, பதுக்கல் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 178 கடைகள், 13 வாகனங்களில் இருந்து 850.500 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை 14 கடைகள், ஒரு வாகனத்தில் இருந்து 39.282 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ