உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீடு கட்டும் திட்டத்தில் மோசடி ஊராட்சி செயலர் சஸ்பென்ட்

வீடு கட்டும் திட்டத்தில் மோசடி ஊராட்சி செயலர் சஸ்பென்ட்

சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட சடையம்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்த தெய்வானையை பி.டி.ஓ சஸ்பெண்ட் செய்தார்.சாத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தரேவதி, இவரது தாயார் சடையம்பட்டி ஊராட்சியில் செயலாளர் தெய்வானை ஆகியோர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ 79 லட்சம் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், சடையம்பட்டி ஊராட்சி செயலாளர் தெய்வானையை சஸ்பெண்ட் செய்தார்.மேலும் சடையம்பட்டி ஊராட்சி செயலாளராக நத்தத்துபட்டி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து (கூ.பொ) நியமனம் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை