மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
7 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
7 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
7 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
7 hour(s) ago
சிவகாசி : சிவகாசி அருகே காரிசேரியில் மாரிக்கனிக்கு சொந்தமான பேன்சி ரக பட்டாசுக்கு உற்பத்தி செய்ய தேவையான அட்டை குழாய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனத்தில் தீப்பெட்டி தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தகர செட் கோடவுனில் பேப்பர் பாம், சக்கரம், ஸ்மோக் உள்ளிட்ட பட்டாசுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோடவுனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.அதேபோல் சிவகாசி அருகே வடபட்டியில் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சானியோ பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த போது, அதிகப்படியான தொழிலாளர்களைக் கொண்டும், வேறு நிறுவனங்களின் லேபிளை பயன்படுத்தியும் பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago