மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 13 குழந்தை திருமணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாவட்டத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக களப்பணியாளர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரால் நேரடியாக குழந்தையின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்யப்படும். ஏப். 1 முதல் 30 வரை மட்டும் 13 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்ட அவற்றின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துஉள்ளார்.
4 hour(s) ago
4 hour(s) ago