உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் 20 நிமிடம் தாமதமான ஓட்டுப்பதிவு

விருதுநகரில் 20 நிமிடம் தாமதமான ஓட்டுப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறால் 20 நிமிடத்திற்கு ஓட்டுப்பதிவு தாமதமானது.விருதுநகரில் நேற்று காலை 7:00 மணிக்கே ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாடு இயந்திரத்துடன் தயாராக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பூஜ்ஜியம் காட்டவில்லை. இதனால் ஓட்டுப்பதிவு துவங்க தாமதம் ஆனது. 20 நிமிடம் கழித்து ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. *ஓட்டளிக்க துவங்கியதற்கு முன்பாக சிவகாசி காரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு ஓட்டு சாவடிகளில் ஓட்டு இயந்திரங்கள் பழுதால் அரை மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. இதேபோல் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டு சரி பார்க்கும் இயந்திரம் பழுதால் ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டு பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை