உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு வீடுகளில் 20 பவுன் நகை கொள்ளை

இரு வீடுகளில் 20 பவுன் நகை கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் அருகே முத்தால்நகர் பூலையா கோனார் தெருவைச் சேர்ந்தவர் சென்றாயபெருமாள். இவர் வேலைக்கு சென்றதால் ஜூலை 15ல் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.அதே போல கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவன் அதே நாள் காலை 10:00 மணிக்கு வீட்டின் சாவியை காம்பவுண்டு சுவரில் இருக்கும் அடுப்புக்குள் வைத்து சென்றார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டை திறந்து பீரோவை உடைத்து நாலரை பவுன் நகை, ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். சிவனின் மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்ததும், பீரோ உடைத்து நகை, பணம் திருடு போயிருந்ததும் தெரிந்தது.போலீசார் கூறியதாவது: இரண்டு திருட்டுக்கள் நடந்த வீடுகள் 500 மீட்டர் தொலைவில் உள்ளன. இப்பகுதியை நன்கு தெரிந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ