உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டி.கடமன்குளம் வி.ஏ.ஓ., செல்வராஜ் 48, உடந்தையாக இருந்த டெய்லர் மோகன்தாசை 52, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.காரியாபட்டி கீழ உப்பிலிக்குடு நக்கீரன் 35. இவரின் நிலத்தை அளவீடு செய்ய ஜமாபந்தியில் மனு கொடுத்தார். காலதாமதம் ஆனதையடுத்து சர்வேயரை அணுகினார். இதையறிந்த டி. கடமன்குளம் வி.ஏ.ஓ., செல்வராஜ் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இறுதியில் ரூ. 25 ஆயிரம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டது. நக்கீரன் இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.நேற்று காலை வி.ஏ.ஓ., செல்வராஜிடம் அவரது அலுவலகத்தில் வைத்து நக்கீரன் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அருகில்கடை வைத்துள்ள அவரது நண்பர் டெய்லர் மோகன்தாஸிடம் கொடுக்க கூறினார். மோகன்தாஸிடம் பணத்தை ஒப்படைத்த போது லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன் துரை ஆகியோர் வி.ஏ.ஓ., மற்றும் டெய்லரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை